Posts

Showing posts from 2021

இருளர்கள்

Image
இருளர் (Irular/Irulas) இவர்கள் தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடியினர் ஆவர்.மலை சார் பிரதேசங்களை வாழ்வியல் ஆதாரமாக கொண்டவர்கள். இவர்கள் பேசும் மொழி இருளா மொழியாகும். ஆயினும் தமிழ் நாட்டில் 180000+ இருளர்ளும் அதே போல கேரளாவில் 23000+ இருளர்ளும் உள்ளனர். அவர்களில் சுத்தமான தமிழ் மலையாளம் பேசாத சொந்த இருளா மொழி பேசுபவர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். எனினும் இருளா மொழி கொடுந்தமிழ் என்பதால் அதில் அநேகமான தமிழ் வார்த்தைகள் தான் இருக்கும். இதனை சிலர் பண்டைய தமிழ் எனவும் சிலர் செந்தமிழ் வடிவம் பெறும் போதே இக்கொடுந்தமிழும் இருளா மொழியாக மாறியது என்று கூறுகின்றனர். ஆயினும் இவர்களது மரபணு பரிசோதனை மூலம் இவர்கள் பண்டைய தமிழர்கள் அதாவது ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சிந்துவெளியில் குடியேறிய அதே தமிழ் இனத்தை சார்ந்தவர்கள் என்று நிரூபணமாகிறது.இவர்களது இன எச்சம் இன்றும் ஆபிரிக்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இருளர் என்பது "People Of Darkness" அதாவது இருண்ட மக்கள் கருமையான தோலை உடைய மக்கள் எனப்பொருள் படும். இவர்கள் பேசுவது ஏன் கொடுந்தமிழ் எனப்படுகிறதென்றால் பண்டைய அறிஞர்கள் ...

கீழடியில் பயன்படுத்தப்பட்ட மீநுண்(Nano) தொழில்நுட்பம்!

Image
  தங்கம் வைரம் வைடூரியம் என்று பெறுமதியானவைகள் மட்டும் தான் புதையல்கள் கிடையாது,பழமமையான பொருட்களும் வரலாற்று சான்றுகளுமே புதையல்கள் தான் அந்தவகையில் நமது கீழடியும் ஒரு புதையல் சுரங்கம் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. காரணம் இதைத்தோண்டத்தோண்ட பற்பல புதையல்கள் கிடைத்துக்கொண்டே போகின்றன. அந்தவகையில் கீழடியிலிருந்து மனித எலும்புகள், நெல்மணிகள், தங்க அணிகலன்கள், பானைஓடுகள், முதுமக்கள்தாழிகள்,ஆமை சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் என்பன கிடைக்கப்பெற்றன.   அத்தோடு மட்டுமல்லாமல் இன்னும் பல அரிய புதையல்கள் கிடைக்குமென்று எதிர்பார்த்து நடாத்தப்பட்ட ஆறாம்கட்ட அகழ்வாய்வின் பயனாக இன்னும் பல பானையோடுகள் கிடைத்தன. பானையோடுகள் முதல் கட்ட ஆய்விலேயே  கிடைத்தன தான் இருப்பினும் பின்னர் கிடைத்த பானைகள் முன்னர் கிடைத்தவையை போன்றே கருப்பு சிவப்பு நிறத்தில் காணப்பட்டாலும் பானையின் உட்பகுதியில் உள்ள பூச்சு பளபளப்பாக இருந்தமையால் அதனை ஆய்வு செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.அதற்கு காரணம் இவ்வளவு ஆண்டுகளாகியும் நிறம்மங்காமையே ஆகும். எனவே அது தொடர்பான ஆய்வின் முடிவாக அவர்கள் பயன்படுத்திய பூ...