தங்கம் வைரம் வைடூரியம் என்று பெறுமதியானவைகள் மட்டும் தான் புதையல்கள் கிடையாது,பழமமையான பொருட்களும் வரலாற்று சான்றுகளுமே புதையல்கள் தான் அந்தவகையில் நமது கீழடியும் ஒரு புதையல் சுரங்கம் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. காரணம் இதைத்தோண்டத்தோண்ட பற்பல புதையல்கள் கிடைத்துக்கொண்டே போகின்றன. அந்தவகையில் கீழடியிலிருந்து மனித எலும்புகள், நெல்மணிகள், தங்க அணிகலன்கள், பானைஓடுகள், முதுமக்கள்தாழிகள்,ஆமை சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் என்பன கிடைக்கப்பெற்றன. அத்தோடு மட்டுமல்லாமல் இன்னும் பல அரிய புதையல்கள் கிடைக்குமென்று எதிர்பார்த்து நடாத்தப்பட்ட ஆறாம்கட்ட அகழ்வாய்வின் பயனாக இன்னும் பல பானையோடுகள் கிடைத்தன. பானையோடுகள் முதல் கட்ட ஆய்விலேயே கிடைத்தன தான் இருப்பினும் பின்னர் கிடைத்த பானைகள் முன்னர் கிடைத்தவையை போன்றே கருப்பு சிவப்பு நிறத்தில் காணப்பட்டாலும் பானையின் உட்பகுதியில் உள்ள பூச்சு பளபளப்பாக இருந்தமையால் அதனை ஆய்வு செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.அதற்கு காரணம் இவ்வளவு ஆண்டுகளாகியும் நிறம்மங்காமையே ஆகும். எனவே அது தொடர்பான ஆய்வின் முடிவாக அவர்கள் பயன்படுத்திய பூ...
Comments