கீழடியில் பயன்படுத்தப்பட்ட மீநுண்(Nano) தொழில்நுட்பம்!

 


தங்கம் வைரம் வைடூரியம் என்று பெறுமதியானவைகள் மட்டும் தான் புதையல்கள் கிடையாது,பழமமையான பொருட்களும் வரலாற்று சான்றுகளுமே புதையல்கள் தான் அந்தவகையில் நமது கீழடியும் ஒரு புதையல் சுரங்கம் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.காரணம் இதைத்தோண்டத்தோண்ட பற்பல புதையல்கள் கிடைத்துக்கொண்டே போகின்றன.




அந்தவகையில் கீழடியிலிருந்து மனித எலும்புகள், நெல்மணிகள், தங்க அணிகலன்கள், பானைஓடுகள், முதுமக்கள்தாழிகள்,ஆமை சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் என்பன கிடைக்கப்பெற்றன.
 



அத்தோடு மட்டுமல்லாமல் இன்னும் பல அரிய புதையல்கள் கிடைக்குமென்று எதிர்பார்த்து நடாத்தப்பட்ட ஆறாம்கட்ட அகழ்வாய்வின் பயனாக இன்னும் பல பானையோடுகள் கிடைத்தன. பானையோடுகள் முதல் கட்ட ஆய்விலேயே  கிடைத்தன தான் இருப்பினும் பின்னர் கிடைத்த பானைகள் முன்னர் கிடைத்தவையை போன்றே கருப்பு சிவப்பு நிறத்தில் காணப்பட்டாலும் பானையின் உட்பகுதியில் உள்ள பூச்சு பளபளப்பாக இருந்தமையால் அதனை ஆய்வு செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.அதற்கு காரணம் இவ்வளவு ஆண்டுகளாகியும் நிறம்மங்காமையே ஆகும். எனவே அது தொடர்பான ஆய்வின் முடிவாக அவர்கள் பயன்படுத்திய பூச்சு கலவையில் மீனுண் / நானோ


தொழில்நுட்பம் பயன்படுத்தியிருந்தமை ஆய்வாளர்களை வியப்புக்குள்ளாக்கியது.அதற்கான காரணம் என்னவென்றால் இதுவரை உலகெங்கும் கிடைத்த ஆகப்பழமையான  மீனுண் தொழில்நுட்பங்கள் 1000 ஆண்டுகள்  கூட பழமையானவை கிடையாது ஆனால் இன்று கீழடியில் கிடைத்தது 2600 ஆண்டுகள் பழமை என்பதே.


இதற்காக அவர்கள் 
Raman Spectroscop 



Transmission Electron Microscopy



X-ray Photoelectron Spectroscopy




என்பவை பயன்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது.

இப்போது Carbon NanoTube (கரிம மீனுண் குழாய்) என்றால் என்ன என்பது பற்றி மேலோட்டமாக பார்க்கலாம்.


ஒரு மீட்டரை நூறு கோடியாக பிரித்தால் அதில் ஒரு பாகமே ஒரு நானோ மீட்டர். Nano(n)=0.000000001
இவ்வாறான நுண்ணிய அளவிடையில் அறுங்கோண வடிவில் வலுவான சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட கார்பன் அணுக்களால் ஆன ஒற்றை அடுக்கு அமைப்பே கிராபீன்(Graphene) மூலக்கூறு ஆகும்.



இந்த கிராபீன் படலத்தைப் பாயைச் சுருட்டுவதுபோல்
சுருட்டினால் கிடைப்பதுதான் கார்பன் நானோ குழாய்கள்.இவற்றில் ஒற்றைச் சுவர் கொண்டதாகவும், பல்சுவர் கொண்டதாகவும் இரண்டு விதமான கார்பன் நானோ குழாய்கள் இருக்கின்றன இதில் பல்சுவர் கொண்டவை ஒன்றுமேற்பட்ட சுவர்களை ஒன்றன் மேல் ஒன்று  வைத்து சுருட்டியாதாக இருக்கும் இதுவே மிக வலிமையானதும் கூட கீழடியில் அதிகம் கிடைத்தது இந்த வகையே.



இந்த நானோ குழாயை உருவாக்க உரிய  வேதிப்பொருட்களும் கலவைகளும் தகுந்த அளவில் கலப்பது மட்டுமன்றி 12000°C - 16000°C
அளவுக்கு வெப்பப்படுத்த வேண்டும். எனவே இவையொன்றும் எதேர்ச்சியாக உருவாக்கப்பட்டவை கிடையாது திட்டமிட்ட அறிவியல் நுணுக்கங்களை தெரிந்தே உருவாக்கி இருக்கிறார்கள்.நிச்சயமாக அவர்களுக்கு இதுதான் கார்பன் இது கார்பன் குழாயை உருவாக்கும் என்று தெரிந்திராது,அவர்களுக்கு தெரிந்தது ஒரு வலுவான பூச்சு கிடைக்கும் இது பானையை உடையாது வைத்திருக்கும் என்பதே. 




இதில் வியப்பு என்னவென்றால் சாதாரணமாக
இங்கு கிடைத்த நானோ குழைய்களின்
விட்டம்
0.6 nm ஆனால் அறிவியல்விதிப்படி இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 0.4 nm அமைப்பது மட்டுமே சாத்தியம்.இதை பார்த்து அறிவியல் உலகே வியக்கிறது என்று புகழ்பெற்ற http://nature.com [Article number: 19786] சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

மூலம் - https://www.nature.com/articles/s41598-020-76720-z

Comments

Popular posts from this blog

இருளர்கள்

தீபாவளி