தீபாவளி

தீபாவளியை கொண்டாடுங்கள் ஆனால்........... என் முன்னோர்கள் இறப்பை கொண்டாடும் உளவியலில் நானும் இல்லை இன்னொருவர் இறப்பை கொண்டாடுவது தமிழர் பண்பாடும் இல்லை. என்ன #நரகாசுரன் உன் முன்னோரா என்று கேட்கத்தூண்டினால் அவர்களுக்கான பதில் 👇🏽 காலங்காலமாக ஆரியர் வழிவந்த பண்டிகைகளில் குறிப்பாக இறப்பை கருப்பொருளாக கொண்ட பண்டிகைகளில் #சுரர்/#அசுரர் என குறிப்பது விந்திய மலைத்தொடர்களுக்கு தெற்கே உள்ள பரந்துபட்ட தெக்கண நிலப்பரப்பை(Deccan) வாழ்விடமாக கொண்ட வெப்ப மண்டல பகுதிக்கு உரியவர்களாகவும் அதற்கேற்ற வலிமையான உடல்வாகையும் கொண்ட பூர்வகுடியினரைத்தான். குறித்த பண்டிகைகளில் வரும் சுரர்/அசுரர் கறுப்பாகவும் திடமான உடல்வாகையும் தனித்து எதிர்கொள்ள முடியா வலிமை பொருந்தியவர்களாகவும் தான் கூறப்பட்டிருப்பர். அவர்கள் வேறு யாருமில்லை A̶r̶y̶a̶n̶ I̶n̶v̶a̶s̶i̶o̶n̶ Aryan Migration அதாவது ஆரிய குடியேற்றம் இடம்பெற முன்னரே இன்றைய இந்தியா மற்றும் இந்திய பெருங்கடலை ஒட்டிய நாடுகளில் பரவி வாழ்ந்த பூர்வக குடி தமிழர்கள் தான், தென்னிந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழ...