தீபாவளி
தீபாவளியை கொண்டாடுங்கள்
ஆனால்...........
என் முன்னோர்கள் இறப்பை கொண்டாடும் உளவியலில் நானும் இல்லை இன்னொருவர் இறப்பை கொண்டாடுவது தமிழர் பண்பாடும் இல்லை.
என்ன #நரகாசுரன் உன் முன்னோரா என்று கேட்கத்தூண்டினால் அவர்களுக்கான பதில் 👇🏽
காலங்காலமாக ஆரியர் வழிவந்த பண்டிகைகளில் குறிப்பாக இறப்பை கருப்பொருளாக கொண்ட பண்டிகைகளில் #சுரர்/#அசுரர் என குறிப்பது விந்திய மலைத்தொடர்களுக்கு தெற்கே உள்ள பரந்துபட்ட தெக்கண நிலப்பரப்பை(Deccan) வாழ்விடமாக கொண்ட வெப்ப மண்டல பகுதிக்கு உரியவர்களாகவும் அதற்கேற்ற வலிமையான உடல்வாகையும் கொண்ட பூர்வகுடியினரைத்தான். குறித்த பண்டிகைகளில் வரும் சுரர்/அசுரர் கறுப்பாகவும் திடமான உடல்வாகையும் தனித்து எதிர்கொள்ள முடியா வலிமை பொருந்தியவர்களாகவும் தான் கூறப்பட்டிருப்பர். அவர்கள் வேறு யாருமில்லை A̶r̶y̶a̶n̶ I̶n̶v̶a̶s̶i̶o̶n̶ Aryan Migration அதாவது ஆரிய குடியேற்றம் இடம்பெற முன்னரே இன்றைய இந்தியா மற்றும் இந்திய பெருங்கடலை ஒட்டிய நாடுகளில் பரவி வாழ்ந்த பூர்வக குடி தமிழர்கள் தான், தென்னிந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள்/நாகர்கள் என்றும் அவர்கள் #Nagas,#Dasas,#Sura & #Asura என்றும் அழைக்பட்ட ஓரினத்தினர் என்றும் அவர்களை non-aryans என்றும் பிரித்து அடையாளப்படுத்தினார் அம்பேத்கர், அவர் இதனை தனது #TheUntouchable என்ற நூலின் வாயிலாக ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டார்.
இன்றைக்கும் இராவணனை எரிக்கும் பண்டிகையாக #Dussehra இருந்து வருகிறது இது ஒன்றை மட்டும் தான் தமிழர்கள் இன்னும் கொண்டாடவில்லை. இப்படி நாம் அரக்கர்களாக நினைப்பது நம் முன்னோர்களை தான். பெரும்பாலும் வெள்ளையான ஆரிய நிறத்தை கடவுளர்களாகவும் கறுப்பு நிறத்தை அரக்கர்களாகவும் தான் வழிபடுவதை காணலாம் இத்தனைக்கும் கருப்பன் கருப்பச்சாமி என்றும் கருப்பு நிறத்தில் சிலை அமைத்து வழிபட்ட நாம் ஏமாற்றப்பட்டோம் என்பது தான் உண்மை.
எனவே உண்மைகளை தெரிந்து பண்டிகையை கொண்டாடுங்கள்
(சுரர்/அசுரர் என்பதன் விளக்கத்தையும் அடுத்த பதிவில் பார்ப்போம்)
Comments