சார்லஸ் டார்வின் (Charles Darwin)

நம்மில் பலர் இவரை பற்றி நன்கு அறிந்திருப்போம் அதற்கு காரணம் அவர் அறிமுகப்படுத்திய கூர்ப்புக் கொள்கை/ பரிணாமக்கொள்கை(Evolution) . "அப்படி என்ன உள்ளது அக்கொள்கையில்?" என்று வினவினால். "என்னதான் இல்லை அதில்" என்பதை பதிலாக கொடுக்கலாம். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு முதன்மைக்கொள்கை தான் பரிணாமவளர்ச்சிக்கொள்கை. அதற்கான காரணம் அன்றைய காலத்தில் உலகின் & உயிர்களின் தோற்றம் பற்றி பரவலாகக் காணப்பட்ட ஒரே ஒரு கொள்கை படைப்புக்கொள்கை தான். அதாவது இவற்றையெல்லாம் படைத்தது கடவுள் தான் என்ற மூடத்தனமான கொள்கை மக்கள் மனதில் வேரூன்றிக் காணப்பட்டது/காணப்படுகிறது. அவற்றையெல்லாம் தகர்க்கும் விதத்தில் இவரது இக்கொள்கை அமைத்திருந்தது. "இவர் மட்டும் தான் அதை முன்வைத்தாரா?" என்றால் நிச்சயம் இல்லை இவருக்கு முன்னரே பலர் முன் வைத்தனர் ஆதாவது உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி Carl Linnaeus என்பவரே இதை முதன் முதலில் முன்மொழிந்தார். ஆனாலும் அன்றைய சூழலில் இது இறை நம்பிக்கைக்கு எதிரான கருத்து என்பதாலும் டார்வினிடம் இவற்றை உறுதி செய்ய போதிய சான்றுகள் இல்லாமையாலும் இக்கொள்கை முதலில் ஏ...