சார்லஸ் டார்வின் (Charles Darwin)




நம்மில் பலர்  இவரை பற்றி நன்கு அறிந்திருப்போம் அதற்கு காரணம் அவர் அறிமுகப்படுத்திய கூர்ப்புக் கொள்கை/பரிணாமக்கொள்கை(Evolution)

"அப்படி என்ன உள்ளது அக்கொள்கையில்?" என்று வினவினால். "என்னதான் இல்லை அதில்" என்பதை பதிலாக கொடுக்கலாம்.

ஏனெனில்  அப்படிப்பட்ட ஒரு முதன்மைக்கொள்கை தான் பரிணாமவளர்ச்சிக்கொள்கை. அதற்கான காரணம் அன்றைய காலத்தில்  உலகின் & உயிர்களின் தோற்றம் பற்றி பரவலாகக் காணப்பட்ட ஒரே ஒரு கொள்கை படைப்புக்கொள்கை  தான். 



அதாவது இவற்றையெல்லாம் படைத்தது கடவுள் தான் என்ற மூடத்தனமான கொள்கை மக்கள் மனதில் வேரூன்றிக் காணப்பட்டது/காணப்படுகிறது. அவற்றையெல்லாம் தகர்க்கும் விதத்தில் இவரது இக்கொள்கை அமைத்திருந்தது. "இவர் மட்டும் தான் அதை முன்வைத்தாரா?" என்றால் நிச்சயம் இல்லை இவருக்கு முன்னரே பலர் முன் வைத்தனர் ஆதாவது உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி Carl Linnaeus என்பவரே இதை முதன் முதலில் முன்மொழிந்தார். ஆனாலும் அன்றைய சூழலில் இது இறை நம்பிக்கைக்கு எதிரான கருத்து என்பதாலும் டார்வினிடம் இவற்றை உறுதி செய்ய போதிய சான்றுகள் இல்லாமையாலும் இக்கொள்கை முதலில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆயினும் டார்வினால் இவற்றை பின்னாட்களிலில் உறுதிப்படுத்த முடிந்தது.அதற்கு முதன்மைக் காரணம் டார்வின் மேற்கொண்ட 5 ஆண்டு கால கடற்பயணம்.அவர் ஒரு ஆய்விற்காக மேற்கொண்ட இப்பயணத்தின் போது  பார்த்த விலங்குகள் பறவைகளை பற்றி குறிப்பெடுத்தார் அதன்போதே பல உயிரினங்களின் எலும்புகளையும் எச்சங்களை சேகரித்தார் அதை வைத்தே ஆய்வுகளிலும் ஈடுபட்டார். அதாவது கடலில் உள்ள ஆமைக்கும் தரையிலுள்ள ஆமைக்கும் பல வேறுபாடுகள் காணப்பட்டன.அவற்றை வைத்து அவை தமது வாழிடங்களிற்கு ஏற்ப இசைவடைகின்றதை கண்டுபிடித்தார். அவை மட்டுமல்ல உலகில் உள்ள உயிரிகள் அனைத்துமே அடிக்கடி பரிணாமம் அடைந்துகொண்டே இருப்பன என்று முன்மொழிந்தார்.


அந்த வகையில் 

*மாறுபாடு (எல்லா உயிரினங்களுக்கு இடையிலும் காணப்படுவது)

*மரபு வழி (ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்)

*உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது) மூன்று பரிணாம அம்சங்களை முதன்மையாக எடுத்துரைத்தார். இரு அம்சத்தின் அடிப்படையில் தான் "தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும், தகுதியற்றவை அழிந்துவிடும் " என்றார் இதைத்தான் "வலியது வாழும்" என்பார்கள்.

இறைவன் தான் எல்லாம், அவர் படைத்தவை தான் இவை அனைத்தும் என்ற கூற்றை அறிவியலால் பொய்யாக்கினார். இத்தனைக்கும் இவரே கிறிஸ்தவ பாதிரியார் ஆவதற்கு படிக்க சென்ற மாணவர் தான்.பைபிளை ஆய்வு செய்யத்தொடங்கிய இவரின் முயற்சியும் இவரது கடற்பயணமும் இவரை மட்டுமன்றி உலகத்தின் போக்களையே மாற்றியமைக்க வித்திட்டது இதுவும் "ஆண்டவரின் அற்புதம்" என்று கடந்து சொல்லவேண்டியது தான். அன்று பலரை சின்னத்திற்கு உள்ளாக்கியது ஆதாம் ஏவாள் கதையை பொய்யாக்கும் விதமாக இவர் கூறிய "மனிதன் குரங்கில் இருந்து உருவானான்" என்ற கூற்றுத்தான். அதற்கு பல எதிர்ப்புகள் உருவாகியும் அவரது ஆதாரங்கள் ஆணித்தனமாக முன்மொழியப்பட்டதால் சிலரால் அந்நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பலரால் பின்னாட்களிலேயே ஏற்கப்பட்டது. இன்றைய அறிவியல் வளர்ந்த காலகட்டத்தில் தான் சிம்பன்சிகளது மரபணுவும் மனிதர்களது மரபணுவும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போவதை நவீன தொழில்நுட்பங்களின் உறுதிப்படுத்தி டார்வின்  கூற்றிற்கு வலுச்சேர்க்கின்றனர் ஆய்வாளர்கள். 

#Kuinsan #குயின்சன் 


Comments

Popular posts from this blog

இருளர்கள்

கீழடியில் பயன்படுத்தப்பட்ட மீநுண்(Nano) தொழில்நுட்பம்!

தீபாவளி