Posts

Showing posts from July, 2025

யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்

Image
“யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” “JAFFNA YOUTH CONGRESS” என்பது 1924 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட புரட்சிகர இளைஞர் அமைப்பாகும் (The Jaffna Youth Congress, was the first of Sri Lanka's Revolutionary Youth Organization / Youth Leagues). இது காந்திய சிந்தனையும் புரட்சிகர உளவியலையும் கொண்ட இளைஞர்களால் இலங்கையின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகவும் ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் , பெண்ணிய விடுதலை போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை கொண்ட முற்போக்க சிந்தனை கொண்ட அமைப்பாக தோற்றம் பெற்றது.  யாழ்ப்பாணம் இளைஞர்/வாலிபர் காங்கிரஸ் 1924 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாணவர் மாநாடு (காங்கிரஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் 1926 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸாகப் பெயர் மாற்றப்பட்டது.  இந்த அமைப்பை ஹன்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்றோரால் தொடங்கப்பட்டு ஜே. வி. செல்லையா, "கலைப்புலவர்" க. நவரத்தினம், ஏ. இ. தம்பர், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா...