யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்
“யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” “JAFFNA YOUTH CONGRESS” என்பது 1924 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட புரட்சிகர இளைஞர் அமைப்பாகும் (The Jaffna Youth Congress, was the first of Sri Lanka's Revolutionary Youth Organization / Youth Leagues). இது காந்திய சிந்தனையும் புரட்சிகர உளவியலையும் கொண்ட இளைஞர்களால் இலங்கையின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகவும் ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் , பெண்ணிய விடுதலை போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை கொண்ட முற்போக்க சிந்தனை கொண்ட அமைப்பாக தோற்றம் பெற்றது.
யாழ்ப்பாணம் இளைஞர்/வாலிபர் காங்கிரஸ் 1924 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாணவர் மாநாடு (காங்கிரஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் 1926 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸாகப் பெயர் மாற்றப்பட்டது.
இந்த அமைப்பை ஹன்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்றோரால் தொடங்கப்பட்டு ஜே. வி. செல்லையா, "கலைப்புலவர்" க. நவரத்தினம், ஏ. இ. தம்பர், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா, ஆயர் எஸ். குலேந்திரன், பி. நாகலிங்கம் (செனட்டர்) ஆகியோரின் தோழமையோடும் இவ்வமைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், குறிப்பாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சாதி மத இன வேறுபாடின்றி ஒன்றிணைந்த இளைஞர்கள் கூட்டத்தால் வலுவடையத் தொடங்கியது.
இவ் அமைப்பானது யாழ்ப்பாணத்துக்குள் அடங்கிவிடாமல் கொழும்புவரை தங்களது புரட்சிகர முன்னெடுப்புகளை முன்னெடுத்து பல சிங்கள இளைஞர்களையும் தம்பால் ஈர்த்துக்கொண்டது. அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்து வந்தமை இவர்களது பரந்த செயற்பாட்டில் ஒரு பகுதியாக அமைந்தது , 1927 ஆம் ஆண்டளவில் காங்கிரஸ் இளைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாட்டில் மகாத்மா காந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் சி. இராசகோபாலாச்சாரி, எஸ். சத்தியமூர்த்தி, போன்ற பல இந்திய விடுதலைப் போராட்டப் பெரியார்கள் வருகை தந்து கீரிமலை, யாழ்ப்பாண முற்றவெளி, ரிட்ச்வே மண்டபம் போன்ற இடங்களில் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார்கள். 1931 இல் இடம்பெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை இந்திய காங்கிரஸ் சோசலிசக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கமலாதேவி சட்டோபாத்தியாயா திறந்து வைத்து உரையாற்றிமை என்பவை இவ் அமைப்பின் வலிமையை தெரிவிக்கின்ற எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.
இந்த அமைப்பு எவ்வளவு பழமையும் முற்போக்கானதும் என்றால் இது தான் இலங்கையின் முதலாவது இளையர் அமைப்பு என்பதோடு மட்டுமன்றி இலங்கையின் ஒட்டுமொத்த இளைஞர்களுக்குமாக உருவாக்கப்பட அகில இலங்கை இளைஞர் காங்கிரஸ்க்கும் All-Ceylon Youth Congress (1931) முன்னோடி என்பதை மறந்துவிடக்கூடாது. அதாவது இலங்கையின் சுதந்திரம் மற்றும் நலனுக்காக தெற்கு இளைஞர்கள் திரளுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே வடக்கில் இளைஞர்களால் உருவாக்கப்ட்டது என்பது வரலாற்று பதிவு . அது மட்டுமன்றி இலங்கையின் முதலாவது கட்சியும் முதலாவது இடது சாரி கட்சியுமான சமசமாஜக் கட்சி (The Lanka Sama Samaja Party (LSSP) is recognized as the oldest political party in Sri Lanka. Formed in 1935 in colonial Ceylon ) தோற்றமடைய முன்னரே யா.வா.கா. இன் செயற்பாட்டாளர்கள் விடுதலைத் தேசிய இயக்கத்தை வலுவுடன் முன்னெடுத்தனர்; எமது சமூக – பண்பாட்டுத் தளத்தில் டொனமூர் அரசியல் யாப்பு முழுமையான சுதந்திரத்தை வழங்க மறுத்தமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யா.வா.கா. முன்னெடுத்திருந்த போராட்டம் கனதியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அந்த யாப்பின் அடிப்படையில் இலங்கைச் சட்டசபைக்கு 1932 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையுடன் அறிவிக்கப்பட்ட தேர்தலை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அவர்கள் முன்னெடுத்த இயக்கம் நாடு முழுமைக்குமாக முன்வைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தெற்கில் பலரும் மதித்து வரவேற்றுருந்தும் வரலாற்றுப்பதிவு ஆனாலும் வடக்கில் மக்கள் முழுமையாக தேர்தலை எதிரத்தும் தெற்கில் பல இடங்களில் தேர்தல் நடாத்தப்படிருந்தமை வேறு கதை.
இவ்வாறு பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தாலும் யாழ்ப்பாண இளைஞர்களால் தோற்றம் பெற்று யாழப்பாண மேலாதிக்க உளவியலை கொண்ட ஏகாதிபத்திய அடிவருடிகளாலேயே எதிர்ப்பிற்கும் வெறுப்பிற்கும் உள்ளான இவ்வமைப்பின் செல்வாக்கு யாழ்ப்பாணத்தில் 1939 ஆம் ஆண்டு வரை நீண்டிருந்தது போதும் 1930களின் பிற்பகுதியில் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த சிலர் அவ் அமைப்பை விட்டு விலகி முழுமாயான இடதுசாரி அரசியலையும் அரசியல் கட்சிகளையும் நாடிச் சென்றனர். இவர்களில் பி. நாகலிங்கம், தர்மகுலசிங்கம், எஸ். செல்லமுத்து, கே. சச்சிதானந்தம், த. துரைசிங்கம் போன்றோர் தெற்கில் அப்போது பிரபலமான சூரிய மல் இயக்கத்தில் சேர்ந்து அதன் வழியாக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர் இதன் பின் இடது சாரியமும் வலது சாரியமும் போட்டிபோட்டு வளர்ந்ததோடு அவரவர் தேவைக்கேற்ப இனவாதங்களை பிரதேசவாதங்களை வளர்த்து ஒட்டுமொத்த இலங்கையின் நலனையும் ஒற்றுமையையும் காப்பாற்ற உரிவான இளைஞர் அமைப்புகளையும் இளைஞர்களையும் மெளனிக்க செய்துவிட்டார்கள்.
இது தான் யா.வா.கா உடைய தோற்றம் வளர்ச்சி சூழ்ச்சியின் பின்னரான வீழ்ச்சி பற்றிய மேலோட்டமான தகவல். (தொடரும்……)
Comments