Posts

Showing posts from January, 2022

What if the Earth Stopped Spinning?

Image
 பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும் 🤔 பூமியானது 365 நாட்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதும், இதனால்  இரவு பகல் ஏற்படுகிறது என்றும் அனைவரும் அறிந்தது.ஆனால் பூமி திடிரென சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்று எப்பொழுதாவது கற்பனை செய்ததுண்டா?மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி 1670 Km/h வேகத்தில் சுற்றும் பூமியானது,திடிரென சுழற்சியை நிறுத்தும் போது பூமியுடன் பிணைக்கப்படாத  அத்தனை பொருட்களும்,உயிரினங்களும் சுமார் 1670 Km வேகத்தில் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும். அதாவது 28 Km/m வேகத்திலும்,5௦௦ M/s வேகத்திலும் இது நிகழும்.கடல்நீரும் பூமியுடன் உறுதியாக பிணைக்கபட்டிருக்கவில்லை எனவே பூமி திடிரென சுழல்வதை நிறுத்துவத்தால் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான சுனாமியானது சுமார் 1670 Km வேகத்தில் 28 Km பரப்பளவு கொண்ட ஒரு பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்கடித்துவிடும். அனைத்து உயிரினங்களும் உடமைகளும் 1670Km வேகத்தில் பறக்கும் பொழுது அதே அசுர  வேகத்தில் சுனாமியும் நம்மோடு பயணிக்கும்.  (கற்பனை செய்து பாருங்கள் ) இதே வ...

𝗥𝗘𝗗 𝗚𝗜𝗔𝗡𝗧 (செம்பெரு மீன்) 🌟

Image
அண்டவெளியில் கோடானகோடி விண்மீன்கள்(நட்சத்திரங்கள்) உள்ளன அவை ஒவ்வொன்றும் அணு இணைவு (Nuclear Fusion) வெளிப்பாட்டால் உருவாகும் பேராற்றலால் ஒளிர்கின்றன. அதே போல இவ் அண்டவெளியில் எங்கோ  ஓர் மூலையில் ஒரு விண்மீன் பிறக்கின்றது அதே நேரத்தில் எங்கோ ஓர் மூலையில் ஓர் விண்மீன் அழிந்து போகின்றது. விண்மீன்களின் வாழ்நாட்காலம் அவற்றின் நிறையை பொறுத்தே அமைகிறது. விண்மீன்களின் பரிணாமம் பற்றி பார்ப்போமேயானால் அண்டவெளியில் காணப்படும் வாயுக்கள் மற்றும் மூலக்கூற்று தூசு துணிக்கைகள் மூலக்கூற்று  மேகமாக (Molecular Cloud) காணப்படும். பின்னர் அவை அண்டவெளி மற்றும் மூலக்கூறுகளுக்குள்  காணப்படும் ஈர்ப்புவிசை காரணமாக முகிழ் மீனாக (protostar) உருப்பெறும்.இது மூலக்கூற்று மேகம் உருவாகுமிடத்தில் சேமிக்கப்பட்டுள்ள நிறையைக் கொண்ட மிக இளைய விண்மீன் ஆகும். இவ்வாறு மூலக்கூறுகளின் சேர்க்கையால் உருவாக்கப்பட்ட அந்த விண்மீனின் நடுவப்பகுதியில் (Central Core) வெப்பமும் அமுக்கமும் உண்டாகும் இதன் காரணமாக அங்குள்ள இரண்டு ஐதரசன்(நீரியம்) அணு (Hydrogen Atom) இணைந்து புதிய ஹீலிய...