What if the Earth Stopped Spinning?
பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும் 🤔
பூமியானது 365 நாட்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதும், இதனால் இரவு பகல் ஏற்படுகிறது என்றும் அனைவரும் அறிந்தது.ஆனால் பூமி திடிரென சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்று எப்பொழுதாவது கற்பனை செய்ததுண்டா?மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி 1670 Km/h வேகத்தில் சுற்றும் பூமியானது,திடிரென சுழற்சியை நிறுத்தும் போது பூமியுடன் பிணைக்கப்படாத அத்தனை பொருட்களும்,உயிரினங்களும் சுமார் 1670 Km வேகத்தில் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும்.
அதாவது 28 Km/m வேகத்திலும்,5௦௦ M/s வேகத்திலும் இது நிகழும்.கடல்நீரும் பூமியுடன் உறுதியாக பிணைக்கபட்டிருக்கவில்லை எனவே பூமி திடிரென சுழல்வதை நிறுத்துவத்தால் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான சுனாமியானது சுமார் 1670 Km வேகத்தில் 28 Km பரப்பளவு கொண்ட ஒரு பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்கடித்துவிடும்.அனைத்து உயிரினங்களும் உடமைகளும் 1670Km வேகத்தில் பறக்கும் பொழுது அதே அசுர வேகத்தில் சுனாமியும் நம்மோடு பயணிக்கும்.
(கற்பனை செய்து பாருங்கள் )
இதே வேகத்தில் தொடந்து பயணிப்போமானால் காற்று அழுத்தத்தால் உடல் சிதறி இறக்க வாய்ப்பு உண்டு.அதே நேரத்தில் இந்நிகழ்வால் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தால் பல அணுகுண்டுகளுக்கு நிகரான தாக்கம் ஏற்படும். இதனால் பல கட்டடங்கள் இருக்கும் இடம் தெரியாது அழிந்து போகும்.பூமி சூரியனை சுற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே வருடத்தில் 6 மாதம் இருளிலும் மீதம் 6 மாதம் பகலிலும் இருக்கும். இதனால் ஒரு வருடத்தில் உள்ள 365 நாட்களும் ஒரேஒரு நாளாக மாறிவிடும்தொடர்ந்து 6 மாதமாக சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து பாலைவனமாகவும், தொடர்ந்து 6 மாதமாக இருளில் இருக்கும் பகுதிகள் பனிபொழிவு அதிகரித்து பனிபிரதேசமாகவும் மாறிவிடும்.பூமி தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த நொடியே,பூமியை சுற்றியுள்ள காந்த மண்டலம் செயலிழந்து போய்விடும். இதனால் சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்களினால் பூமியில் உள்ள மீத உயிர்களும் அழிந்துவிடும்.அதீத வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி முற்றாக பூமி நீரால் மூழ்கடிக்கப்படும்.பின்னர் அதீத வெப்பத்தின் காரணமாக நீர் உறிஞ்சப்பட்டு ஒரு கட்டத்தில் பூமியே பாலைவனமாகி விடும். சிறு நுண்ணுயிர்க்கூட வாழ தகுதியற்ற உலகமாக நம் பூமி மாறிவிடும்.
நன்றி 🙏
#Earth #பூமி #உலகம்
Comments