Posts

யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்

Image
“யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” “JAFFNA YOUTH CONGRESS” என்பது 1924 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட புரட்சிகர இளைஞர் அமைப்பாகும் (The Jaffna Youth Congress, was the first of Sri Lanka's Revolutionary Youth Organization / Youth Leagues). இது காந்திய சிந்தனையும் புரட்சிகர உளவியலையும் கொண்ட இளைஞர்களால் இலங்கையின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகவும் ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் , பெண்ணிய விடுதலை போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை கொண்ட முற்போக்க சிந்தனை கொண்ட அமைப்பாக தோற்றம் பெற்றது.  யாழ்ப்பாணம் இளைஞர்/வாலிபர் காங்கிரஸ் 1924 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாணவர் மாநாடு (காங்கிரஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் 1926 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸாகப் பெயர் மாற்றப்பட்டது.  இந்த அமைப்பை ஹன்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்றோரால் தொடங்கப்பட்டு ஜே. வி. செல்லையா, "கலைப்புலவர்" க. நவரத்தினம், ஏ. இ. தம்பர், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா...
 #மாவீரச்சிகள் மனம் கொள்ளை கொண்ட காதலன் ஆயினும் மணமேடையேற்றிய மணவாளன் ஆயினும் மண் சுமந்த வேட்கைக்காக மண்ணோடு மண்ணாக மக்கிப்போனால் மனதொடிந்து மாண்டுபோக மன்னர் காலத்து மங்கையர் அல்லர் எம் பெண்டிர்! மாற்றே அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் வழிவந்த மாவீரச்சிகள்  ( மகளிர் நாள் ஆக்கம்)
 "நயனிலார் வேட்கை பயனிலார் யாக்கைக்கு ஈடு" - நான் (குயின்சன்) 

சார்லஸ் டார்வின் (Charles Darwin)

Image
நம்மில் பலர்  இவரை பற்றி நன்கு அறிந்திருப்போம் அதற்கு காரணம் அவர் அறிமுகப்படுத்திய  கூர்ப்புக் கொள்கை/ பரிணாமக்கொள்கை(Evolution) .  "அப்படி என்ன உள்ளது அக்கொள்கையில்?" என்று வினவினால். "என்னதான் இல்லை அதில்" என்பதை பதிலாக கொடுக்கலாம். ஏனெனில்  அப்படிப்பட்ட ஒரு முதன்மைக்கொள்கை தான் பரிணாமவளர்ச்சிக்கொள்கை. அதற்கான காரணம் அன்றைய காலத்தில்  உலகின் & உயிர்களின் தோற்றம் பற்றி பரவலாகக் காணப்பட்ட ஒரே ஒரு கொள்கை படைப்புக்கொள்கை  தான்.  அதாவது இவற்றையெல்லாம் படைத்தது கடவுள் தான் என்ற மூடத்தனமான கொள்கை மக்கள் மனதில் வேரூன்றிக் காணப்பட்டது/காணப்படுகிறது. அவற்றையெல்லாம் தகர்க்கும் விதத்தில் இவரது இக்கொள்கை அமைத்திருந்தது. "இவர் மட்டும் தான் அதை முன்வைத்தாரா?" என்றால் நிச்சயம் இல்லை இவருக்கு முன்னரே பலர் முன் வைத்தனர் ஆதாவது உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி Carl Linnaeus என்பவரே இதை முதன் முதலில் முன்மொழிந்தார். ஆனாலும் அன்றைய சூழலில் இது இறை நம்பிக்கைக்கு எதிரான கருத்து என்பதாலும் டார்வினிடம் இவற்றை உறுதி செய்ய போதிய சான்றுகள் இல்லாமையாலும் இக்கொள்கை முதலில் ஏ...

தீபாவளி

Image
தீபாவளியை கொண்டாடுங்கள்  ஆனால்........... என் முன்னோர்கள் இறப்பை  கொண்டாடும் உளவியலில் நானும் இல்லை இன்னொருவர் இறப்பை கொண்டாடுவது தமிழர் பண்பாடும் இல்லை.  என்ன #நரகாசுரன் உன் முன்னோரா என்று கேட்கத்தூண்டினால் அவர்களுக்கான பதில் 👇🏽 காலங்காலமாக ஆரியர் வழிவந்த பண்டிகைகளில் குறிப்பாக இறப்பை கருப்பொருளாக கொண்ட பண்டிகைகளில் #சுரர்/#அசுரர் என குறிப்பது விந்திய மலைத்தொடர்களுக்கு தெற்கே உள்ள பரந்துபட்ட தெக்கண நிலப்பரப்பை(Deccan) வாழ்விடமாக கொண்ட வெப்ப மண்டல பகுதிக்கு உரியவர்களாகவும் அதற்கேற்ற வலிமையான உடல்வாகையும் கொண்ட பூர்வகுடியினரைத்தான். குறித்த பண்டிகைகளில் வரும் சுரர்/அசுரர் கறுப்பாகவும் திடமான உடல்வாகையும்  தனித்து எதிர்கொள்ள முடியா வலிமை பொருந்தியவர்களாகவும் தான் கூறப்பட்டிருப்பர். அவர்கள் வேறு யாருமில்லை  A̶r̶y̶a̶n̶ I̶n̶v̶a̶s̶i̶o̶n̶  Aryan Migration அதாவது ஆரிய குடியேற்றம் இடம்பெற முன்னரே இன்றைய இந்தியா மற்றும் இந்திய பெருங்கடலை ஒட்டிய நாடுகளில் பரவி வாழ்ந்த பூர்வக குடி தமிழர்கள் தான், தென்னிந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழ...

What if the Earth Stopped Spinning?

Image
 பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும் 🤔 பூமியானது 365 நாட்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதும், இதனால்  இரவு பகல் ஏற்படுகிறது என்றும் அனைவரும் அறிந்தது.ஆனால் பூமி திடிரென சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்று எப்பொழுதாவது கற்பனை செய்ததுண்டா?மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி 1670 Km/h வேகத்தில் சுற்றும் பூமியானது,திடிரென சுழற்சியை நிறுத்தும் போது பூமியுடன் பிணைக்கப்படாத  அத்தனை பொருட்களும்,உயிரினங்களும் சுமார் 1670 Km வேகத்தில் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும். அதாவது 28 Km/m வேகத்திலும்,5௦௦ M/s வேகத்திலும் இது நிகழும்.கடல்நீரும் பூமியுடன் உறுதியாக பிணைக்கபட்டிருக்கவில்லை எனவே பூமி திடிரென சுழல்வதை நிறுத்துவத்தால் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான சுனாமியானது சுமார் 1670 Km வேகத்தில் 28 Km பரப்பளவு கொண்ட ஒரு பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்கடித்துவிடும். அனைத்து உயிரினங்களும் உடமைகளும் 1670Km வேகத்தில் பறக்கும் பொழுது அதே அசுர  வேகத்தில் சுனாமியும் நம்மோடு பயணிக்கும்.  (கற்பனை செய்து பாருங்கள் ) இதே வ...

𝗥𝗘𝗗 𝗚𝗜𝗔𝗡𝗧 (செம்பெரு மீன்) 🌟

Image
அண்டவெளியில் கோடானகோடி விண்மீன்கள்(நட்சத்திரங்கள்) உள்ளன அவை ஒவ்வொன்றும் அணு இணைவு (Nuclear Fusion) வெளிப்பாட்டால் உருவாகும் பேராற்றலால் ஒளிர்கின்றன. அதே போல இவ் அண்டவெளியில் எங்கோ  ஓர் மூலையில் ஒரு விண்மீன் பிறக்கின்றது அதே நேரத்தில் எங்கோ ஓர் மூலையில் ஓர் விண்மீன் அழிந்து போகின்றது. விண்மீன்களின் வாழ்நாட்காலம் அவற்றின் நிறையை பொறுத்தே அமைகிறது. விண்மீன்களின் பரிணாமம் பற்றி பார்ப்போமேயானால் அண்டவெளியில் காணப்படும் வாயுக்கள் மற்றும் மூலக்கூற்று தூசு துணிக்கைகள் மூலக்கூற்று  மேகமாக (Molecular Cloud) காணப்படும். பின்னர் அவை அண்டவெளி மற்றும் மூலக்கூறுகளுக்குள்  காணப்படும் ஈர்ப்புவிசை காரணமாக முகிழ் மீனாக (protostar) உருப்பெறும்.இது மூலக்கூற்று மேகம் உருவாகுமிடத்தில் சேமிக்கப்பட்டுள்ள நிறையைக் கொண்ட மிக இளைய விண்மீன் ஆகும். இவ்வாறு மூலக்கூறுகளின் சேர்க்கையால் உருவாக்கப்பட்ட அந்த விண்மீனின் நடுவப்பகுதியில் (Central Core) வெப்பமும் அமுக்கமும் உண்டாகும் இதன் காரணமாக அங்குள்ள இரண்டு ஐதரசன்(நீரியம்) அணு (Hydrogen Atom) இணைந்து புதிய ஹீலிய...